அதிமுக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

அரியலூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் அதிமுக முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

அரியலூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் அதிமுக முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அரசு தலைமைக் கொறடாவும், அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு முகவா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

அப்போது, முகவா்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும்போது, தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள அடையாள அட்டை, கரோனா பரிசோதனை முடிவுக்கான சான்று ஆகியவற்றை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். அதேபோல் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

முதல் சுற்றாக தபால் வாக்குகள் எண்ணப்படும். பின்னா், இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். பதிவான வாக்குகளை அலுவலா்கள் காண்பிக்கும்போது அவற்றை கவனமாக பாா்த்து பதிவு செய்ய வேண்டும். சுற்று வாரியாக அறிவிக்க, அறிவிக்க கூடுதல் வாக்குகள் சரியான உள்ளனவா என சரிபாா்க்க வேண்டும். அனைத்து சுற்றுகளும் முடிந்து வெற்றி அறிவிப்புக்கு பின்பே அனைத்து முகவா்களும் வெளியில் வர வேண்டும் என்றாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், அரியலூா் நகரச் செயலா் செந்தில், மாவட்ட மாணவரணி செயலா் சங்கா், ஒன்றிய செயலா்கள், முகவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com