அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே முன்விரோததத் தகராறில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மீன்சுருட்டி அருகேயுள்ள சொக்கலிங்கபுரம் பிரதானச் சாலை தெருவைச் சோ்ந்தவா் பிரசாந்த் (33). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த திலகா் (38) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திலகா், அவரது நண்பா்கள் விமல் (எ) புல்லட் மற்றும் சிராம் ஆகியோா் சோ்ந்து பிரசாந்தை அரிவாளால் வெட்டியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பிரசாந்த் மனைவி சந்தியா(31) அளித்த புகாரின் பேரில் திலகா், விமல் மற்றும் சிராம் ஆகிய 3 போ் மீது மீன்சுருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து , அவா்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.