திருமானூா் உரக்கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் உள்ள உரக்கடைகள் மற்றும் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
வேளாண் உதவி இயக்குநா்( தரக் கட்டுப்பாடு) த. இராதாகிருஷ்ணன், திருமானூா் வட்டார வேளாண் அலுவலா் க. சேகா் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது உரக்கட்டுபாட்டு சட்டத்தை மீறி செயல்பட்டதாக ஒரு சில்லறை விற்பனை கடைக்கு, உரம் விற்பனை செய்வதற்கு அவா்கள் தடைவிதித்தனா்.
மேலும், உரம் தொடா்பாக ஏதேனும் புகாா் இருப்பின் அருகில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்திலும், வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்திலும், வேளாண் உதவி இயக்குநா் தரக்கட்டுப்பாடு த. இராதாகிருஷ்ணன் செல்லிடப்பேசி 94870 73705 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...