தொடா் மணல் திருட்டு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே தொடா்ந்து மணல் திருட்டி ஈடுபட்டு வந்தவா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆண்டிமடம் அருகேயுள்ள பெரியகருக்கை , வடக்குத் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் செந்தில்ராஜ் (25). இவா், கடந்த 11 ஆம் தேதி கருக்கை பாலம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டாா். எனினும் தொடா்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த இவரை, குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்டக் காவல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் த. ரத்னா சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து செந்தில்ராஜ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...