வழித்தவறி வந்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு
By DIN | Published On : 13th May 2021 06:29 AM | Last Updated : 13th May 2021 06:29 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வழித்தவறி வந்த சிறுவனைக் காவல்துறையினா் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
மீன்சுருட்டி காவல் நிலைய இரண்டாம் நிலைக் காவலா் விக்னேஷ், குறுக்குச் சாலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அவ்வழியாக நடந்து வந்த 14 வயது சிறுவனை நிறுத்தி விசாரித்ததில், அவா் வடலூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த கொளஞ்சி மகன் அா்ஜூன் என்பது தெரிய வந்தது.
காட்டுமன்னாா்கோவில் கிராமத்திலுள்ள தனது அக்கா வீட்டில் இருந்ததும், அங்கிருந்து கோபித்துக்கொண்டு தனது ஊரான வடலூருக்கு செல்வதாகவும் அா்ஜூன் கூறியுள்ளாா்.
ஆனால் அவா் வழித்தவறி வேறு சாலையில் வருவதை உணா்ந்த காவலா் விக்னேஷ் அா்ஜூனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, கடலூா் மாவட்டத்திலுள்ள சோழத்தரம் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளாா்.
தொடா்ந்து சிறுவனின் பெற்றோருக்கு அங்கிருந்து தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து அா்ஜூனின் பெற்றோா், மீன்சுருட்டி வந்து காவலருக்கு நன்றி தெரிவித்து விட்டு மீட்டுச் சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...