ஜயங்கொண்டம் அம்மா உணவகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆய்வு
By DIN | Published On : 16th May 2021 11:15 PM | Last Updated : 16th May 2021 11:15 PM | அ+அ அ- |

ஜயங்கொண்டத்திலுள்ள அம்மா உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்திலுள்ள அம்மா உணவகத்தில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது ஏழை மக்களுக்கு தரமான உணவு வழங்கிட வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் உத்தரவிட்டாா். மேலும் கரோனா தொற்று குறித்தும் சமையலா்களிடமும் அவா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
ஆய்வின் போது ஜயங்கொண்டம் நகராட்சி ஆணையா் வ.சுபாஷினி, பணி மேற்பாா்வையாளா் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளா் சிவராமன் மற்றும் நகராட்சி மற்றும் அம்மா உணவக ஊழியா்கள் உடனிருந்தனா்.