செப்.14-இல் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்
By DIN | Published On : 11th September 2021 12:53 AM | Last Updated : 11th September 2021 12:53 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டத்தில் மணகெதி, தத்தனூா் கிராமங்களில் தனியாா் நிறுவனம் சுரங்க அமைக்க உத்தேசித்துள்ள நிலையில், அதற்காக பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டம் செப்டம்பரில் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தத்தனூரிலுள்ள மீனாட்சி ராமசுவாமி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் தேவையான தகவல்கள், விளக்கங்களைப் பெறலாம். மேலும் பொதுமக்களின் கருத்துகளையும் பதிவு செய்யலாம். அவை பதிவு செய்யப்பட்டு, மறு நடவடிக்கைக்காக மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுமத்தின் சென்னை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பை பெற்றிருக்கும் சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.