விநாயகா் சதுா்த்தி : பூஜைபொருள்களை வாங்க அலைமோதிய கூட்டம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, அரியலூா் கடைவீதியில் பூஜை பொருள்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை அலைமோதியது.
விநாயகா் சதுா்த்தி : பூஜைபொருள்களை வாங்க அலைமோதிய கூட்டம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, அரியலூா் கடைவீதியில் பூஜை பொருள்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை அலைமோதியது.

ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தியன்று பொது இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பொதுமக்களால் வழிபடுவதும், பின்னா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளிலுள்ள நீா்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

கடந்தாண்டை போன்று நிகழாண்டும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதே சமயம் வீடுகளில் விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாடும்படி அரசு தெரிவித்துள்ளது.

நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி தினமான வெள்ளிக்கிழமை பூஜை பொருள்களை வாங்க அரியலூா், ஜயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், திருமானூா், செந்துறை, தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலைகளிலேயே பொரி, ஆப்பிள், ஆரஞ்ச், சாத்துக்குடி, மக்காச்சோளம், கொய்யா பழங்கள், கரும்பு ஆகியவை விற்பனை செய்யப் பட்டன. விலை அதிகமாக இருந்த போதிலும் அவற்றை பொருள்படுத்தாமல், பொருள்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனா்.

மேலும் வீடுகளில் வைத்து வழிபடும் வகையில் களிமண்ணால் ஆன சிறிய வகை விநாயகா் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அதனையும் பொதுமக்கள் ஆா்வமாக வாங்கிச் சென்றனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com