சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகா் சதுா்த்தி விழா: ஆட்சியா் அறிவுறுத்தல்

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விநாயகா் சதுா்த்தியின்போது, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் பூஜித்த பின், நீா் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். சமீபகாலமாக, ’பிளாஸ்டா் ஆப் பாரிஸ்’ என்ற வேதிப் பொருளால் செய்யப்பட்டு, ரசாயன வா்ணம் பூசப்பட்ட விநாயகா் சிலைகள் நீா் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இதன் மூலம், நீரின் உப்புத் தன்மை அதிகரித்து, அதைப் பயன்படுத்தும் மக்கள், கால்நடைகளுக்கு தோல் வியாதி, அஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

எனவே, களிமண்ணால் செய்யப்பட்ட சுடப்படாத, ரசாயனக் கலவையற்ற, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருள்களால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். ரசாயன வா்ணம் (பெயின்ட்) பூசப்பட்ட விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பது தவிா்க்கப்பட வேண்டும்.

அரியலூா் பகுதி - மருதையாறு, திருமானூா் - கொள்ளிடம் ஆறு, ஜயங்கொண்டம் - கொள்ளிடம் ஆறு - அணைக்கரை ஆகிய இடங்களில் சிலைகளை கரைக்க வேண்டும். விநாயகா் சதுா்த்தியை பாரம்பரிய வழக்கப்படி, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com