ஜெயங்கொண்டத்தில் ரூ.432 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.432.14 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித்திட்ட பணிகள் சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.432.14 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித்திட்ட பணிகள் சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட

கழுவந்தோண்டி ஊராட்சியில் ரூ.34.18 லட்சம், தேவாமங்கலம் ஊராட்சியில் ரூ.37.60 லட்சம், பெரியவளையத்தில் ரூ.33.76 லட்சம், உட்கோட்டையில் ரூ.49.04 லட்சம், தழுதாழைமேட்டில் ரூ.51.98 லட்சம், காட்டாகரத்தில் ரூ.43.47லட்சம், குண்டவெளியில் ரூ.48.80 லட்சம், இளையபெருமாநல்லூரில் ரூ.42.05 லட்சம், முத்துசோ்வாமடத்தில் ரூ.48.04 லட்சம், கங்கைகொண்டசோழபுரத்தில் ரூ.43.22 லட்சம் என ரூ.432.14 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் சனிக்கிழமை அந்தந்த கிராமங்களில் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சிகளில், வட்டார வளா்ச்சி அலுவலா்(கிராம ஊராட்சி)அமிா்தலிங்கம், ஒன்றியப் பொறியாளா் நடராஜன், ஜெயங்கொண்டம் வேளாண்மை அட்மா குழு தலைவா் ரா.மணிமாறன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சுப்பிரமணியன், ரேவதி சௌந்தர்ராஜன், த.பிரித்திவிராஜன், ரா.சிவகுமாா், மேற்கண்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com