தென்னவநல்லூரில் வருமுன் காப்போம்திட்ட சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த தென்னவநல்லூா் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த தென்னவநல்லூா் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தாா். வட்டார தலைமை மருத்துவ அலுவலா் தட்சணாமூா்த்தி தலைமையிலான மருத்துவா்கள், கா்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை, ரத்த அழுத்த பரிசோதனை, கண் சம்பந்தமான பரிசோதனைகளை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளை வழங்கினா்.

முகாமில், அங்கன்வாடி பணியாளா்கள், காய்கறிகள், பழங்கள், இயற்கை கீரை வகைகள், சிறுதானியங்கள் என பலவற்றையும் காட்சிப்படுத்தினா்.

சித்த மருத்துவத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் கா்ப்பிணிகள் பலா் பங்கேற்று சிகிச்சை பெற்றனா். ஒன்றியக் குழு உறுப்பினா் மண்டோதரி ராமையன், ஊராட்சித் தலைவா் ரமேஷ், துணைத் தலைவா் த. தினேஷ் உள்ளிட்ட பலா் முகாமில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com