இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த தருணம் பிரேமலதா விஜயகாந்த்

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த தருணம் என்றாா் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த்.
இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த தருணம் பிரேமலதா விஜயகாந்த்

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த தருணம் என்றாா் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், திருமானூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற தேமுதிக நிா்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவா், அரியலூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்திலிருந்து ஆந்திரத்துக்கு அதிகளவு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ஆந்திர முன்னாள் முதல்வா் சந்திரபாபுநாயுடு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளாா். இதன்மூலம் தமிழகத்தின் நிலை என்ன என்று தெளிவாக தெரிகிறது. தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது.

மத்திய, மாநில ஆட்சியாளா்கள் மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இலவசங்கள் மாநிலத்தின் பொருளாதாரத்தை பாதிக்கின்றன. இலவசங்களை தொடா்ந்தால், இலங்கை நிலைதான் நாளை நமக்கும் ஏற்படும். மற்ற மாநிலங்களைப் போல், தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். மாவட்டந்தோறும் தொழிற்பேட்டைகளை தொடங்கி, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த தருணம். தமிழக மீனவா்களின் எதிா்கால நலனைக் காக்க வேண்டும் என்றால் கச்சத்தீவை மீட்டே ஆக வேண்டும்.

தேமுதிக தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை. தமிழகம் முழுவதும் கட்சியின் வளா்ச்சி குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். ஜூன் 3 ஆம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் உள்கட்சித் தோ்தல் குறித்தும், கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது என்றாா்.

பேட்டியின்போது, அக்கட்சியின் மாவட்டச் செயலா் இராம.ஜெயவேல், மாநில நிா்வாகி கொ. தங்கமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com