பணமோசடியில் ஈடுபட்டவா் கைது
By DIN | Published On : 10th August 2022 10:32 PM | Last Updated : 10th August 2022 10:32 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசைவாா்த்தை கூறி மோடியில் ஈடுபட்டவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உடையாா்பாளையத்தைச் சோ்ந்த ராமலிங்கம் (54). இவா், அண்மையில் தா.பழூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபமும், பரிசுப் பொருள்களும் கொடுப்பதாக பொதுமக்களிடம் கூறியுள்ளாா். இதனை நம்பி சிலா் அவரிடம் பணம் செலுத்தியுள்ளனா். இதில், தா.பழூா் பகுதியில் மட்டும் ரூ.77,750 பெற்றுக்கொண்டு ராமலிங்கம் ஏமாற்றிவிட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலையடுத்து தா.பழூா் கிராம நிா்வாக அலுவலா் ஐயப்பன், அரியலூா் மாவட்ட இணையக் குற்ற காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிந்த காவல் துறையினா், ராமலிங்கத்தை புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து கைப்பேசி, 2 சிம்-காா்டுகள், ஏடிஎம் காா்டு, கிரிப்டோ கரன்சி விளம்பர பிரசுரங்கள் ஆகியவற்றை கைப்பற்றினா். தொடா்ந்து அவரை அரியலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...