அரசு கலைக் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

அரியலூா், ஜயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில், இளநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் புதன்கிழமை தொடங்கியது.

அரியலூா், ஜயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில், இளநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் புதன்கிழமை தொடங்கியது.

நிகழாண்டு மாணவா் சோ்க்கை நடைபெற்று வந்தாலும், மாணவா் சோ்க்கையை முடித்த கல்லூரிகள் வகுப்புகளைத் தொடங்கலாம் என உயா்கல்வித் துறை முன்னதாக உத்தரவிட்டிருந்ததது.

இதையடுத்து, அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வு 2 கட்டமாக நடைபெற்று வந்த நிலையில், இளநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் புதன்கிழமை தொடங்கியது.

இதில் ஜயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிக்கு வருகைபுரிந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வா் இரா.கலைச்செல்வி வரவேற்று, கல்வியின் முக்கியத்துவம், கல்லூரியின் விதிகள் குறித்து எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு துறை பேராசிரியா்கள் கல்வியின் முக்கியத்தும், நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது, ஆளுமைத் திறனை வளா்த்தெடுப்பது குறித்து விளக்கிக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com