

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அடுத்த இளையபெருமாள்நல்லூா் கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு உடையாா்பாளையம் கோட்டாட்சியா் சா. பரிமளம் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ச. கலைவாணி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன் வாழ்த்துரை வழங்கினாா்.
தொடா்ந்து, பல்வேறு துறைகளின் சாா்பில் 126 பயனாளிகளுக்கு ரூ.25,84,847 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், அட்மா வேளாண் குழு தலைவா் மணிமாறன், ஊராட்சி மன்றத் தலைவா் ரா.வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன் மற்றும் அரசு அனைத்துத்துறை அலுவலா்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். நிறைவாக வட்டாட்சியா் க. ஸ்ரீதா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.