கஞ்சா விற்பனை : 2 போ் கைது
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை இரவு நெல்லித்தோப்பு புதிய மேம்பாலம் பகுதியில் மீன்சுருட்டி ராமதேவநல்லூா், பிரதான சாலை தெருவைச் சோ்ந்த குமாா் மகன் விஜய்(27) வைத்திருந்த பையில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதேபோல், கொல்லாபுரம் பிரிவு சாலையில் நின்றிருந்த கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் , பல்வாய்கண்டம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் ஜானகிராமனை ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா பொட்டலங்களுடன் கைது செய்தனா்.