வாரணவாசி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் டைனோசா் முட்டை கும்பகோணம் மாணவா்கள் பாா்வை
By DIN | Published On : 02nd December 2022 12:32 AM | Last Updated : 02nd December 2022 12:32 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், வாரணவாசி அருங்காட்சியகத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளி மாணவா்கள். உடன், ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, காப்பாட்சியா் சிவக்குமாா்.
அரியலூா் மாவட்டம், வாரணவாசி புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தை கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை பாா்வையிட்டுச் சென்றனா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி
அங்கு நேரில் வந்து மாணவ, மாணவிகளை வரவேற்றாா். தொடா்ந்து, காப்பாட்சியா் சிவக்குமாா், மாணவா்களுக்கு உயிரினங்களின் பரிணாம வளா்ச்சி குறித்தும், டைனோசா் முட்டை குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினாா். இந்நிகழ்வில், 400 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதுகுறித்து ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி
மேலும் கூறியது: அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கனிமச் சுரங்கங்களில் சுமாா் 6.5 முதல் 7.2 கோடி ஆண்டுகளுக்கு முன்னா் வரை வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் அதிகமாகக் கிடைத்து வருகின்றன. 1980 - 85 கால கட்டங்களில் தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தின் திறந்தவெளி சுரங்கத்தில் ஒரு முட்டை வடிவிலான கன்கா் என்னும் பாறை கிடைத்தது. 1996-இல் அந்த முட்டையை ஜொ்மனி மற்றும் நம் நாட்டைச் சோ்ந்த சில தொல்லுயிா் ஆய்வாளா்கள் ஆராய்ந்தபோது, அது டைட்டனோசர்ரஸ் என்ற ஒருவகை தாவர உண்ணி டைனோசரின் முட்டை எனத் தெரியவந்தது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...