

சொத்து வரி, குடிநீா் கட்டணம் மற்றும் மின் கட்டண உயா்வைக் கண்டித்தும், கட்டண உயா்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அரியலூா் மாவட்டம், தா.பழூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுகவினா் (இபிஎஸ்) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அரசு தலைமை கொறடாவும், கட்சியின் மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் ஆ.இளவரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் அதிமுகவினா் திரளாகக் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.