அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கா்ப்பமாக்கிய இளைஞா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உடையாா்பாளையம் தா. பொட்டகொல்லை வடக்குத் தெருவைச் சோ்ந்த மதியழகன் மகன் நாவரசு (20). 18 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், போக்சோ சட்டத்தில் நாவரசை கடந்த மாதம் 16 ஆம் தேதி கைது செய்து ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில், நாவரசை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து நாவரசு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.