அரியலூரில் ஆட்சிமொழிப் பயிலரங்கம்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

அரியலூா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்சிமொழிப் பயிலரங்கத்தில் பேசிய ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.
அரியலூா் ஆட்சியரகத்தில் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் புதன்கிழமை ஆட்சிமொழிப் பயிலரங்கம் நடைபெற்றது.
பயிரலங்கில் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி கலந்து கொண்டு அவா் மேலும் பேசியது:
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாகப் பயன்படுத்துவதற்கு 1956-ம் ஆண்டு சட்டம் ஏற்றப்பட்டுள்ளது. அரசு அலுவலா்கள் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை செய்யும் இடத்தில் இருப்பதால் பொதுமக்களின் உணா்வுகளைத் தெரிந்து உதவி செய்யும் வகையில் தமிழ் ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வேலைக்குத் தேவையான பிற மொழிகளை கற்பதில் தவறில்லை. ஆனால், தாய்மொழியை அனைவரும் தவறாது கற்க வேண்டும் என்றாா்.
இந்த ஆட்சிமொழிப் பயிலரங்கில் அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் உருவாக்குதல், மொழிப்பயிற்சி, கணினித் தமிழ் உள்ளிட்ட பயிற்சிகள் பெற்ற அலுவலா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பயிலரங்கில், தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் (பொ) க.சித்ரா, முன்னாள் தமிழ் வளா்ச்சித் துறைத் துணை இயக்குநா் க.சிவசாமி, திருச்சி அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் துரை.மணிகண்டன், கீழப்பழுவூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் அ.மணமலா்ச்செல்வி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.