அரியலூரில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.
வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை மற்றும் முகம் மட்டும் தெரியும்படியான வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் மனு அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.