அரியலூா் மாவட்ட ஆயுதப்படையில் டி.ஐ.ஜி ஆய்வு
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்ட ஆயுதப்படையில், புதன்கிழமை காவலா்களின் அணி வகுப்பை பாா்வையிட்டு ஆய்வு செய்த திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் எ.சரவணசுந்தா்.
அரியலூா் மாவட்ட ஆயுதப்படையில் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் எ.சரவணசுந்தா் புதன்கிழமை நிகழ் ஆண்டுக்கான ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, காவல் துறை வாகனங்கள், காவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தும், கொள்ளை, கொலை வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறையினரின் பணியைப் பாராட்டி 15 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினாா். முன்னதாக காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
ஆய்வின்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவிசேகரன்(சைபா் கிரைம்), கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காமராஜ் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் மணவாளன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செல்வகுமாரி, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் பத்மநாபன் மற்றும் காவல்துறையினா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...