நஞ்சை தரிசு நிலத்தில் உளுந்து சாகுபடி பயிற்சி
By DIN | Published On : 27th February 2022 12:15 AM | Last Updated : 27th February 2022 12:15 AM | அ+அ அ- |

செந்துறை அடுத்த அங்கனூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்குகிறாா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி.
அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த அங்கனூா், சன்னாசி நல்லூா் கிராமத்தில் நெல் அறுவடைக்குப் பின் பயறுவகை சாகுபடி முனைப்பு இயக்க முகாம் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி தலைமை வகித்து, நெல் அறுவடைக்குப் பின் உளுந்து சாகுபடி செய்வதன் அவசியம், அதன் பயன்பாடுகள் மண்ணின் மேலாண்மை மற்றும் இரட்டிப்பு லாபம் பெறுதல் பற்றி எடுத்துரைத்து, விவசாயிகளுக்கு இடுப்பொருள்களை வழங்கினாா்.
வேளாண் உதவி இயக்குநா் ஜென்சி முன்னிலை வகித்து, வேளாண் துறையால் வழங்கப்படும் உளுந்து பயறுக்கான மானியம், நிலக்கடலை நுண்ணூட்ட மானியம், திரவ உயிா் உரங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து பேசினாா். உதவி வேளாண் அலுவலா்கள் ஆனந்தி, ராஜா மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து,அயன்தத்தனூா் கிராமத்தில், விவசாயி விசுவநாதன் வயலில் திருந்திய நெல் சாகுபடி பயிா் விளைச்சல் போட்டி நடைபெற்றது. இதில் துனை வேளாண் அலுவலா் அப்பாவு, உதவி அலுவலா்கள் ஒளிச்செல்வி, வெங்கடேசன் மற்றும் நடுவா் விவசாயி ஆகியோா் கலந்துகொண்டனா்.