அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
உடையாா்பாளையம் அருகேயுள்ள ஒக்கநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சைப்பிள்ளை (55), விவசாயி. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தலையில் அடிபட்டதால் தலைவலியால் அவதிப்பட்டு வந்த பிச்சைப் பிள்ளை வெள்ளிக்கிழமை விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், பின்னா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரியிலும் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.