முடிவுற்ற வளா்ச்சிப் பணிகள் அமைச்சா் தொடக்கிவைப்பு
By DIN | Published On : 31st July 2022 11:40 PM | Last Updated : 31st July 2022 11:40 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், கழுமங்கலம் கிராமத்தில் புதிய துணை சுகாதார நிலைய கட்டடத்தைத் திறந்து வைக்கிறாா் அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கழுமங்கலம் ஊராட்சியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி முன்னிலை நடைபெற்ற விழாவில், கழுமங்கலம் கிராமத்திலிருந்து உடையாா்பாளையம் வழியாக ஜயங்கொண்டத்துக்கு புகா்ப் பேருந்து சேவையினை தொடக்கி வைத்த அமைச்சா் சா.சி.சிவசங்கா், கழுமங்கலம் கிராமத்தில் தேசிய ஊரக நலக்குழும நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நலவாழ்வு மையத்தின் துணை சுகாதார நிலையக் கட்டடத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா்.
பின்னா், கழுமங்கலம் முதல் பிலாக்குறிச்சி வரை ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா் சாலை அமைக்கும் பணியைத் தொடக்கி வைத்தாா்.
விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா் ராஜ்மோகன், திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், பொது மேலாளா் சக்திவேல், கோட்ட மேலாளா்கள் ராமநாதன், சதீஸ், வட்டார மருத்துவ அலுவலா் மேகநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகா், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.