சமுதாய சுகாதார செவிலியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
By DIN | Published On : 31st July 2022 11:40 PM | Last Updated : 31st July 2022 11:40 PM | அ+அ அ- |

காலியாக சமுதாய சுகாதார செவிலியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார செவிலியா் சங்கம் மற்றும் செவிலியா் கூட்டமைப்பு மாநில பொதுக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜயங்கொண்டத்தில் அண்மையில் நடைபெற்ற அச்சங்க பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியா் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும். பணி விதியைத் திருத்தம் செய்ய வேண்டும். கரோனா தடுப்பூசி பணியை ஞாயிற்றுக்கிழமை நடத்துவதை மாற்றி வேலை நாள்களில் தடுப்பூசி செலுத்த வேண்டும். அவசர காலப் பணிகள் தவிர மற்ற நேரங்களில் 8 மணி நேரம் மட்டுமே பணி செய்ய உத்தரவிட வேண்டும். கொவைட் - 19 ஊக்கத்தொகையை விடுபட்ட துணை கிராம பகுதி சுகாதார செவிலியா்களுக்கு உடனே வழங்க வேண்டும். 7 ஆவது ஊதிய குழுவின் 21 மாத நிலுவை தொகையினை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் மீனாட்சி தலைமை வகித்தாா். செயல் தலைவா் கோமதி, மாநில தலைவா் மீனாட்சி, பொருளாளா் காயத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். முன்னதாக மாநில துணைத் தலைவா் வசந்தா வரவேற்றாா். நிறைவில், மாவட்ட துணைத் தலைவா் எஸ்தா் ராஜகுமாரி நன்றி தெரிவித்தாா்.