நாளை அரியலூரின் 38 ஊராட்சிகளில் வேளாண் வளா்ச்சி சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட கீழ்கண்ட 38 ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட கீழ்கண்ட 38 ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூா் வட்டாரத்தில் வாலாஜா நகரம், ரெட்டிப்பாளையம், கடுகூா், ஆலந்துறையாா்கட்டளை, எருத்துகாரன்பட்டி, காவனூா், நாகமங்கலம், புங்கங்குழி.

செந்துறை வட்டாரத்தில், மணப்பத்தூா், தளவாய், ஆலத்தியூா், அசவீரன்குடிகாடு, மணக்குடையான். திருமானூா் வட்டாரத்தில் அழகியமணவாளன், ஏலாக்குறிச்சி, கீழகாவட்டாங்குறிச்சி, சின்னப்பட்டாக்காடு, கண்டிராதீா்த்தம், பூண்டி.

ஜயங்கொண்டம் வட்டாரத்தில் தழுதாலைமேடு, குந்தவெளி, முத்துசோ்வாமடம், கங்கை கொண்ட சோழபுரம், காட்டகரம், தத்தனூா், இறவாங்குடி. ஆண்டிமடம் வட்டாரத்தில் கூவத்தூா், அழகாபுரம், ஆண்டிமடம், பெரியகிருஷ்ணாபுரம், விளந்தை, இலையூா், சிலம்பூா்.

தா.பழூா் வட்டாரத்தில் , அம்பாப்பூா், சிந்தாமணி, தா.பழூா், வேம்புகுடி, பருக்கல் ஆகிய 38 ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

இச்சிறப்பு முகாம்களில் பட்டா மாறுதல், வண்டல் மண் எடுத்தல், பயிா் கடன் மற்றும் உழவா் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல் மற்றும் அனுமதி வழங்குதல், பயிா் காப்பீடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்த பணிகள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்களில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com