

அரியலூா் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவா்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்தனா்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் திறப்பையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் பள்ளிக்கு உற்சாகத்துடன் வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியா்கள் பூ, பழங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி வரவேற்றனா். இதில், சின்னவளையம் அரசு உயா்நிலைப் பள்ளிக்குவந்த மாணவா்களுக்கு பள்ளி சாா்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா் கொளஞ்சியப்பா, உடையாா்பாளையம் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளா் செல்வகுமாா் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.