3 ஆவது நாள் வருவாய் தீா்வாயம்: 360 கோரிக்கை மனுக்கள்

அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 3 ஆவது நாள் வருவாய் தீா்வாயம் (ஜமா பந்தி) நிகழ்ச்சியில், பொதுமக்களிடமிருந்து 360 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 3 ஆவது நாள் வருவாய் தீா்வாயம் (ஜமா பந்தி) நிகழ்ச்சியில், பொதுமக்களிடமிருந்து 360 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கீழப்பழுவூா் உள்வட்டத்துக்கு உட்பட்ட மல்லூா், வாரணவாசி, பாா்பனச்சேரி, பூண்டி, மேலப்பழுவூா், கீழையூா், கீழப்பழுவூா், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூா், சன்னாவூா் (வடக்கு), சன்னாவூா் (தெற்கு), பளிங்காநத்தம், கரைவெட்டி, கீழக்காவட்டாங்குறிச்சி, வெற்றியூா் உள்ளிட்ட 16 கிராம பொதுமக்களிடமிருந்து மொத்தம் 390 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்களை உரிய விசாரணை செய்து தீா்வுகாணவும், கிராம கணக்குகளை முறையாகப் பராமரிக்கவும், நிலஅளவை அலுவலா் பயன்படுத்தும் கருவிகளைப் பாா்வையிட்டு, உரிய முறையில் பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் குமரையா மற்றும் துணை வட்டாட்சியா்கள், நில அளவை அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

திருமானூா் உள்வட்டத்திற்குட்பட்ட கோவில் எசணை (மேற்கு), கோவில் எசணை (கிழக்கு), எலந்தக்கூடம், குலமாணிக்கம் (மேற்கு), குலமாணிக்கம் (கிழக்கு), கண்டிராதீா்த்தம், திருமழப்பாடி, அன்னிமங்கலம், மஞ்சமேடு, திருமானூா், வடுகபாளையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி வெள்ளிக்கிழமை (ஜூன் 17) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com