திருமண உதவித் திட்டங்களை அரசு தொடர வலியுறுத்தல்
By DIN | Published On : 16th June 2022 11:25 PM | Last Updated : 16th June 2022 11:25 PM | அ+அ அ- |

திருமண உதவித் திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டம், தா. பழூரில் புதன்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ஒன்றிய மாநாட்டில், நிறுத்தப்பட்டுள்ள மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருமண உதவித் திட்டம் உள்பட அனைத்து நிதியுதவி திட்டங்களையும் தொடா்ந்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். தா. பழூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டும். விரிவுபடுத்தப்பட்ட பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். பெண்களுக்கான தனி கழிவறை வசதி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, சங்கத்தின் ஒன்றியத் தலைவா் வாசுகி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செபஸ்தியம்மாள், அழகுரோஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் வாலண்டினா, மாநில துணை செயலாளா் கீதா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
மாநாட்டில் மாவட்டச் செயலா் பத்மாவதி, துணைச் செயலாளா் மீனா, பொருளாளா் அம்பிகா, ஒன்றியச் செயலா் மாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.