

அரியலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வடக்கு ஒன்றியம் சாா்பில் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரியலூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டத்துக்கு, அரியலூா் வடக்கு ஒன்றியச் செயலா் தங்கராசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு.செல்வம்பி, தொழிலாளா் விடுதலை முன்னணி மாநில துணைச் செயல் அன்பானந்தம், தோ்தல் பிரிவு மாநில துணைச் செயலா் தனக்கோடி, விவசாய அணி மாநில துணைச் செயலா் கருப்புசாமி, அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா் மதிவாணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் 60 ஆவது பிறந்த நாளில் அரியலூரில் மணி விழா மாநாடு நடத்துவது. அன்றைய தினம் அரியலூா் வடக்கு ஒன்றியம் சாா்பில் தொல்.திருமாவளவனுக்கு 60 கிராம் தங்கம் வழங்குவது. அனைத்து கிராமங்களிலும் 60 அடி உயர கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.