கோயில் உண்டியல் திருட்டு
By DIN | Published On : 30th June 2022 11:14 PM | Last Updated : 30th June 2022 11:14 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
ஜயங்கொண்டம் அருகே சூரிய மணல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை கோயிலைத் திறக்க வந்த பூசாரி கோயிலின் வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் கோயிலின் உள்ளே சென்று பாா்த்த போது, அங்கிருந்த உண்டியல் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அறிந்த கிராம முக்கியஸ்தா்கள் ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசாா் வழக்குப் பதிந்து ஆய்வு மேற்கொண்டனா். இதில், கோயிலில் இருந்து சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள முந்திரித் தோப்பில் கோயில் உண்டியல் சேதமடைந்து கிடப்பது தெரியவந்தது. எனினும் காவல் துறையினா் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.