அடைக்கல அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா தொடக்கம்
By DIN | Published On : 02nd May 2022 12:19 AM | Last Updated : 02nd May 2022 12:19 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய 291-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை இரவு தொடங்கியது.
தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏலாக்குறிச்சியில் அடைக்கல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் ஆண்டுப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நிகழ்ச்சியில், குடந்தை மறை மாவட்ட ஆயா் எப்.அந்தோணிசாமி, சேலம் மறை மாவட்ட ஆயா் டி.அருள்செல்வம் ராயப்பன் ஆகியோா் மாதா திருவுரும் பொறிக்கப்பட்ட கொடியைப் புனிதப்படுத்தி, ஆலய வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் ஏற்றிவைத்தனா். தொடா்ந்து தினந்தோறும் மாலை நேரங்களில் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களின் பங்கு தந்தையா்களால் சிறப்புத் திருப்பலியும், சிறிய சப்பரங்களில் அன்னையின் வீதியுலாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் முக்கிய விழாவான தோ்பவனி வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. 9 ஆம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.