அரியலூரின் 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 02nd May 2022 12:18 AM | Last Updated : 02nd May 2022 12:18 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி. உடன் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன்.
மே தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், தா.பழூா் ஒன்றியம், தென்கச்சிப் பெருமாள் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி, ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கிராம சபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், ஊரக திட்டப் பணிகள் மற்றும் நிதி செலவின விவரங்கள், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம்-ஐஐ, 2022-23-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள், பள்ளி கழிப்பறைகள், அங்கன்வாடி மையக் கழிப்பறைகள் மற்றும் பல்வேறு பணிகள் மற்றும் செயல்பாடுகள் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், ஒன்றியக்குழுத்தலைவா் மகாலெட்சுமி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.