அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைவது உறுதி செய்யப்படும்’

தமிழக அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர உறுதி செய்யப்படும் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைவது உறுதி செய்யப்படும்’

தமிழக அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர உறுதி செய்யப்படும் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டு செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற 100 நாள்களுக்குள் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் ரூ.2.30 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய அரியலூா் மாவட்டத்திற்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

இதுவரையில் இல்லாத அளவாக 2,289 விவசாயிகளுக்கு ரூ.33.33 கோடி மதிப்பீட்டில் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வேளாண் மக்கள் மற்றும் நலிந்த பிரிவினா் பயன் பெறும் வகையில் 20,838 பேருக்கு ரூ.734 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி மற்றும் 2,672 மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ.14.80 கோடி கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

48 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 3,712 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 8,125 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

2.35 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.4,000 கரோனா நிவாரணத் தொகை, 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு பெற்றோா்களையும் இழந்த ஆதரவற்ற 3 குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடும், மாதம் ரூ.3,000 பராமரிப்புச் செலவும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பெற்றோரை இழந்த 110 குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வைப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் கரோனா தொற்றால் உயிரிழந்த 521 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் 64,859 மாணவ, மாணவிகளுக்கு 2,648 பெண் தன்னாா்வலா்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலா் சிவக்குமாா், வேளாண் இணை இயக்குநா்கள் பழனிசாமி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் போ.சுருளிபிரபு உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com