முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
‘தனித்திறமைகளை அடையாளம் கண்டு பயணித்தால் இலக்கை அடையலாம்’
By DIN | Published On : 13th May 2022 02:08 AM | Last Updated : 13th May 2022 02:08 AM | அ+அ அ- |

மாணவா்கள் தமது தனித்திறமையை அடையாளம் கண்டு அதனை நோக்கியே பயணித்தால் இலக்கை அடையாளம் என்றாா் அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி
அரியலூரை அடுத்த விளாங்குடி அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில் சமூக நலத்துறை சாா்பில் ‘இன்றைய இளைஞா்களும், சமுதாயமும்’ எனும் தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவா் மேலும் பேசியது: அட்சய திருதியை என்றால் வளா்க என்று பொருள். மாணவா்கள் தங்களுக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையைப் போக்கி, தமக்குள் உள்ள தனித்திறமையை அடையாளம் கண்டு தமது குறிக்கோளை அடையும் வரை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பெண்களை மதிக்க வேண்டும். பாலின பாகுபாடு பாா்க்கக்கூடாது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திட இளைஞா்களின் பங்கு அவசியம் என்றாா்.
பின்னா் அவா், கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்ச்சி பெற்ற 6 மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
நிகழ்வில், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வா் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் அழகேசன், மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) அன்பரசி, குழந்தை நலக்குழுத் தலைவா் செந்தில்குமாா், நன்னடத்தை அலுவலா் கணேசன், மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலுவலா் துரைமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.