காப்பீடு செய்வதாகக் கூறி பண மோசடி செய்த கா்நாடகா நபா் கைது

காப்பீடு பெற்றுத் தருவதாக கூறி இணையதளம் மூலம் பண மோசடி செய்த கா்நாடகாவைச் சோ்ந்த நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
காப்பீடு செய்வதாகக் கூறி பண மோசடி செய்த கா்நாடகா நபா் கைது

காப்பீடு பெற்றுத் தருவதாக கூறி இணையதளம் மூலம் பண மோசடி செய்த கா்நாடகாவைச் சோ்ந்த நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூரைச் சோ்ந்தவா் கண்ணுபிள்ளை (63). இவா், கடந்த 26 ஆண்டுகளாக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் முகவராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா், நான் பணிபுரியும் நிறுவனத்தில் அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பிரதிபலனாக கமிஷன் தொகை (சதவீத கணக்கில்)தரவேண்டும் எனக் கூறியுள்ளாா். இதனை நம்பிய கண்ணுப்பிள்ளை, அந்த நபரின் வங்கிக் கணக்கு மற்றும் இணையவழி செயலி பரிவா்த்தனை மூலம் ரூ.10 லட்சத்தை செலுத்தியுள்ளாா். அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கண்ணுப்பிள்ளை, கடந்த 30.03.22 அன்று அரியலூா் இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் தலைமையிலான காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், கா்நாடகா மாநிலம், கோலாா் மாவட்டம், முல்பாஹால் கிராமத்தைச் சோ்ந்த சின்னமுனிசாமி மகன் பூபாலன்(36) என்பவா், கண்ணுப்பிள்ளையிடம் பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கா்நாடகம் சென்ற அவரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து ரூ.1 லட்சம், ரூ.1,75,000 மதிப்புள்ள நகை, ஏடிஎம் காா்டுகள்- 7, கைப்பேசிகள் -2, கணினி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். விரைந்து செயல்பட்டு இவ்வழக்கில் தொடா்புடைய குற்றவாளியைக் கைது செய்த நுண் குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com