மது விற்றவா் கைது
By DIN | Published On : 16th May 2022 06:40 AM | Last Updated : 16th May 2022 06:40 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மது விற்றவா் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டாா்.
ஆண்டிமடம் காவல் உதவி ஆய்வாளா் பிச்சைமணி தலைமையிலான காவல் துறையினா், கீழநெடுவாய்ப் பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த்(எ)டேவிட் சின்னதுரை (35) மதுபானங்களைப்பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...