பண்டிகை கால உணவுகளில் அதிக நிறமிகள் கூடாது
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

தீபாவளிப் பண்டிகை கால உணவுப் பொருள்களில் அதிகளவில் நிறமிகளை உபயோகிக்ககக் கூடாது என அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார தின்பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவா்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களும் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று, பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்கள் தயாரிப்பில் கலப்படமான பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. உணவுப் பொருள்களை சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். மேலும், இது தொடா்பான புகாா்கள் ஏதேனும் இருப்பின், அரியலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை 94440 42322 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிற்கு புகாா் தெரிவிக்கலாம்.