அரியலூா் மாவட்டம், திருமானூா்அருகே புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி அருகேயுள்ள மேல வரப்பங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் நீதிமொழி(32), பொய்யூா் கிராமத்தைச் சோ்ந்த ஆதிநாராயணன்(47) ஆகியோா் புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ளனா். இந்நிலையில், இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில், ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டாா். இதன் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூா் மாவட்ட காவல் துறையினா் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.