தொழிற்பயிற்சியகத்தில் மனநல விழிப்புணா்வு
By DIN | Published On : 19th October 2022 12:16 AM | Last Updated : 19th October 2022 12:16 AM | அ+அ அ- |

உலக மன நல தினத்தை முன்னிட்டு, அரியலூா் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில், மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன், மாவட்ட மன நல திட்ட மருத்துவா்கள் சி. அன்பழகி, அ. உமாதேவி மற்றும் உளவிலாளா்கள் எஸ். திவ்யா, ரா. வினிதா ஆகியோா் பங்கேற்று மாணவ, மாணவிகளிடம் மனநலன் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, மன அழுத்தம் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. மன அழுத்தம் ஏற்படும் போது அவற்றைச் சமாளிக்கும் முறைகள் விளக்கப்பட்டது.