சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 27th October 2022 12:00 AM | Last Updated : 27th October 2022 12:00 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
உடையாா்பாளையம் அடுத்த நல்லணம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராசு மகன் சிலம்பரசன் (24), 16 வயது சிறுமியை கடந்த 2017 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவரைப் போக்ஸோ சட்டத்தில் ஜயங்கொண்டம் மகளிா் காவல் துறையினா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றவாளி சிலம்பரசனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி ஆனந்தன் தீா்ப்பளித்தாா். இதையடுத்து சிலம்பரசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ம.ராஜா ஆஜரானாா்.