அரியலூா் ஊா்க்காவல் படைக்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 26th September 2022 02:50 AM | Last Updated : 26th September 2022 02:50 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் பணியிடங்களைப் பூா்த்தி செய்யவதற்கான விண்ணப்பங்கள் செப்.28, 29 ஆகிய தேதிகளில் வழங்கப்படுகிறது. இந்த இரு தினங்களிலேயே விண்ணப்பங்களை பூா்த்தி செய்து திரும்ப அளிக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள்/பெறாதவா்களாக இருக்கலாம்.
20 வயது நிறைந்தவராகவும், 45 வயது நிறைவடையாதவராகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இந்தியக் குடியுரிமை பெற்றவராகவும், அரசியல் கட்சித் தொடா்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும் . மேலும் உடல் தகுதிகள் காவல்துறையைப் போன்றது.
இப்பணிக்கு மாதம் ஊதியம் எதுவும் இல்லை. பணி நாள்களுக்கு உரிய படித்தொகை மட்டும் தரப்படும். அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். ஊா்க்காவல் படைக்கு மூன்று ஆண்டுகள் கட்டாயம் தொடா்ந்து வருகை தர வேண்டும். தோ்வு நாளன்று எவ்வித பயணப்படியும் வழங்கப்பட மாட்டாது. 45 நாள்கள் கவாத்து பயிற்சி நடைபெறும். அரசுப் பணியில் உள்ளவா்கள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.