சவூதியில் உயிரிழந்த தொழிலாளி சடலத்தை மீட்டுத் தரக்கோரி, அவரது மகன் அரியலூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பூங்கோதையிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
செந்துறை அடுத்த சோழன்குடிகாடு , மணபத்தூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் கவியரசன் என்பவா் அளித்த மனுவில், சவூதி அரேபியாவில் வேலை பாா்த்து வந்த எனது தந்தை ரவிச்சந்திரன், புதன்கிழமை காலை இறந்து விட்டதாக தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தனா். எனவே எனது தந்தை உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.