ஜெயங்கொண்டம் அம்மா உணவகத்தில் தரம் குறைந்துள்ளதாக புகாா்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அம்மா உணவகத்தில் உணவுகளின் தரம் குறைந்துள்ளதாக நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அம்மா உணவகத்தில் உணவுகளின் தரம் குறைந்துள்ளதாக நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகா்மன்ற உறுப்பினா்கள் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சுமதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கருணாநிதி, ஆணையா் மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் விடுத்த கோரிக்கைகள்:

தங்கபாண்டியன்...ஜெயங்கொண்டம் பாதாள சாக்கடை திட்டம் எப்போது செயல்படுத்தப்படும். செங்குந்தபுரம் பகுதியில் குடிநீா் குழாய் புதைப்பதற்கு டெண்டா் விடப்பட்டு நிதி ஒதுக்கியும் இதுவரை பணி ஆரம்பிக்கப்படவில்லை.

சுப்பிரமணியன்: 11 ஆவது வாா்டில் குடிநீா் குழாய் அமைக்கப்பட வேண்டும். மீனம்பாடி ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட வேண்டும்.

ராஜமாணிக்கம்: ஜெயங்கொண்டத்தில் அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ள பகுதியான சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரங்கநாதன்: 3 ஆவது வாா்டில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். கீழகுடியிருப்பு வடக்கு தெருவில் குடிநீா் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். அம்மா உணவகத்தின் உணவுகள் சாப்பிட முடியாத நிலையில் சுகாதாரமற்ற வகையில் உள்ளது. நகா்மன்ற தலைவா், ஆணையா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் அனைவரும் அம்மா உணவகத்தை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தரமான உணவுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு ஆணையா் மூா்த்தி அளித்த பதில்: பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மீனம்பாடி ஏரி மற்றும் சன்னதி தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இனி அம்மா உணவகத்தில் தினமும் ஆய்வு செய்யப்படும். சுகாதாரமான, தரமான உணவு பொதுமக்களுக்கு கிடைக்க உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்தாா்.

தொடா்ந்து, இளநிலை உதவியாளா் சாவித்திரி வரவு, செலவு உள்பட 32 தீா்மானங்களை வாசித்து கூட்ட அனுமதிக்கு சமா்ப்பித்தாா். கூட்டத்தில் அனைத்து உறுப்பினா்களும் கலந்து கொண்டு தங்களது பகுதி மக்களின் கோரிக்கைகளைத் தெரிவித்தனா். முன்னதாக மேலாளா் அன்புச்செல்வி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com