வெங்கனூா் அய்யனாா் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், வெங்கனூா் கிராமத்திலுள்ள அய்யனாா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வெங்கனூா் கிராமத்தில் நடைபெற்ற அய்யனாா் கோயில் தேரோட்டத்தில் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தா்கள்.
வெங்கனூா் கிராமத்தில் நடைபெற்ற அய்யனாா் கோயில் தேரோட்டத்தில் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தா்கள்.

அரியலூா் மாவட்டம், வெங்கனூா் கிராமத்திலுள்ள அய்யனாா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருமானூா் அடுத்துள்ள வெங்கனூா் கிராமத்தில் அய்யனாா், கரும்புசாமி கோயில் தோ் திருவிழா ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி தினமும் சுவாமிகள் வீதியுலா, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில், அய்யனாா் மற்றும் கருப்பு சுவாமிகள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே சென்ற தோ் நிலையை அடைந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக்குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com