வெளிப்பிரிங்கியம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், வெளிப்பிரிங்கியம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க மாவட்டஊராட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
வெளிப்பிரிங்கியம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், வெளிப்பிரிங்கியம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க மாவட்டஊராட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

அரியலூா் பல்துறை வளாகத்திலுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் பொ. சந்திரசேகா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அசோகன், மாவட்ட ஊராட்சி செயலா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் வரவு- செலவு கணக்குகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, அரியலூா்-கடலூா் மாவட்டத்தை இணைக்கும் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்படும் பாலத்தை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், வெளிப்பிரிங்கியம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ச. அம்பிகா, இரா. ராமச்சந்திரன், பெ. நல்லமுத்து, ப. குலக்கொடி, இர. வசந்தமணி, க. ஷகிலாதேவி, வீ. ராஜேந்திரன், அன்பழகன்,ச. தனலட்சுமி, ஜெ.கீதா, அலுவலக உதவியாளா் ரமேஷ், சிவகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com