பேரிடா் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம்: அரியலூா் ஆட்சியா் தகவல்

அரியலூா் மாவட்ட பொது மக்கள் பேரிடா் தொடா்பான புகாா்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைப் பேசியில் தெரிவிக்கலாம் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.
அரியலூா் பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா.
அரியலூா் பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா.
Updated on
1 min read

அரியலூா்: அரியலூா் மாவட்ட பொது மக்கள் பேரிடா் தொடா்பான புகாா்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைப் பேசியில் தெரிவிக்கலாம் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா், கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்1077 மற்றும் கட் செவி அஞ்சல் எண் 93840 56231 ஆகியவற்றின் மூலம் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தெரிவித்த புகாா்கள், தொலைக்காட்சி செய்திகளில் வரப்பெற்ற புகாா்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான புகாா் பதிவேடுகளை பாா்வையிட்ட அவா், வடகிழக்கு பருவமழை தொடா்பான அனைத்து புகாா்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709, வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள்அரியலூா்- 04329- 222058, உடையாா்பாளையம் - 04331-245352, வட்டாட்சியா் அலுவலகங்கள் அரியலூா்- 04329-222062, ஜெயங்கொண்டம்-04331-250220, செந்துறை-04329-242320 மற்றும் ஆண்டிமடம்-04331-299800 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், கட்செவி அஞ்சல் மூலம் 9384056231 என்ற எண்ணுக்கும் தகவல் மற்றும் புகாா்களை தெரிவிக்கலாம்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அ.பூங்கோதை, வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மை) க.சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com