விவசாயியை கொல்ல முயன்ற வழக்கு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜெயங்கொண்டம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.


அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜெயங்கொண்டம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
இலையூா் தெற்குவெளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கொளஞ்சிநாதன்(38). கடந்த 14.10.2021 அன்று இவரது தந்தை பூராசாமி தனது வீட்டின் அருகே சிறுநீா் கழித்த போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சதாசிவம் மகன் மணிகண்டன் (35) என்பவா் பூராசாமியிடம் தகராறில் ஈடுபட்டாா். இதை தட்டிக் கேட்ட கொளஞ்சிநாதனை, மணிகண்டன் அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றாா்.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஜெயங்கொண்டம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லதா, குற்றவாளி மணிகண்டனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...