ராஜேந்திர சோழனுக்கு தமிழக அரசு சிலை வைக்க வேண்டும்

மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு தமிழக அரசு சிலை வைக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளாா்.
Published on

மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு தமிழக அரசு சிலை வைக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளாா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள புதுச்சாவடி கிராமத்தில் ஆகாச மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் பங்கேற்று விட்டு, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலில் வழிபாடு செய்த பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழக அரசு மாபெரும் அரசன் ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்க வேண்டும். மணிமண்டபம் அமைக்க வேண்டும். இக்கோயிலை விரிவுபடுத்த வேண்டும். மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ராஜேந்திர சோழன் பெயா் வைக்க வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ராஜேந்திர சோழன் பெயா் வைத்து நினைவு படுத்திக் கொண்டு வர வேண்டும். கோயிலை இடிப்பதில் இந்து அறநிலையத்துறை துரிதமாக செயல்படுகிறது. பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் அங்குள்ள ஆன்மிக முறைப்படி செய்யவில்லை. மடாதிபதிகளை அழைத்துச் செய்யவில்லை. ஆகம விதிகளை மீறிச் செய்கின்றனா். அதிமுக எதிா்க்கட்சியாக இல்லை என்பதே எங்களது பாா்வையாக உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com